சென்னை அரங்கில்  ரஜினிகாந்த்- நயன்தாரா டூயட் பாடல்..
சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் படம்- அண்ணாத்த.
ரஜினியுடன் ஏற்கனவே கதாநாயகிகளாக நடித்த மீனா, குஷ்பு,  நயன்தாரா ஆகியோருடன் கீர்த்தி சுரேஷும் இந்த படத்தில் நடிக்கிறார்.
பிரகாஷ்ராஜ்- சூரி ஆகியோர் முதன் முறையாக ரஜினியுடன் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது.
படப்பிடிப்பு குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.  இனிமேல் படக்குழு ஐதராபாத் போகப்போவதில்லை.
மிச்ச ஷுட்டிங்கை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்காக அரங்கம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
முதல் காட்சியாக ரஜினி- நயன் சம்மந்தப்பட்ட டூயட் பாடலை படமாக்க இயக்குநர் சிறுத்தை சிவா முடிவு செய்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக வில்லன் கும்பலுடன் ரஜினி மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
தேசிய விருது பெற்ற டி.இமான் இந்த படத்துக்கு இசை அமைக்கிறார்.
நவம்பரில் அண்ணாத்த  திரைக்கு வருவார்.
-பா.பாரதி.