டி 20 சர்வதேச போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை நமீபிய பேட்ஸ்மேன் ஜன் நிகோலே லாப்ட்டி ஏடன் ஏற்படுத்தியுள்ளார்.

நேபாள் நாட்டில் நேபாள், நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் கலந்து கொள்ளும் டி-20 போட்டிகள் இன்று முதல் மார்ச் 5 ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் நேபாள் அணிக்கு எதிராக நமீபியா அணி இன்று விளையாடியது அதில் 33 பந்துகளில் 100 ரன்கள் அடித்து ஜன் நிகோலே லாப்ட்டி ஏடன் சாதனை படைத்தார்.

இதற்கு முன் கடந்த ஆண்டு ஆசிய கோப்பை டி-20 போட்டிகளில் மங்கோலிய அணிக்கு எதிராக விளையாடிய நேபாள் அணியைச் சேர்ந்த குஷால் மல்லா 34 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார்.

குஷால் மல்லா-வின் இந்த சாதனைக்கு முன் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர், இந்தியாவின் ரோகித் சர்மா மற்றும் செக் குடியரசின் சுதேஷ் விக்ரமசேகரா ஆகியோர் 35 பந்துகளில் 100 ரன்களை எடுத்திருந்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.