இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

ராஞ்சி-யில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து இந்த தொடரை கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 353 ரன்கள் எடுத்தது தொடர்ந்து விளையாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 307 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் மற்றும் குலதீப் யாதவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 145 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது.

இதனை அடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.