நாமக்கல், அரியலூரில், பல லட்சம் பறிமுதல்

Must read

a
அரியலுார் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வாகன சோதனை நடத்தப்பட்ட போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1.5 லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர். இத போல அலங்காநத்தம் பகுதியில் பைக்கில் ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்  அருகேவாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படையினர் லாரி ஒன்றை சோதனை செய்த போது 1.50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மாரியப்பன் என்பவர்  இந்த பணத்தை கணக்கில் காட்டாமல் எடுத்து சென்றதாக பிடிபட்டார்.
இதேபோல மயிலாடுதுறை அருகே கணக்கில் காட்டாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.70 ஆயிரம் மினி லாரியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தம் பஸ் நிறுத்தம் அருகே பைக் ஒன்றை சோதனை செய்தபோது, கணிக்கில் காட்டாமல் 5 லட்ச ரூபாய் எடுத்து சென்றது தெரியவந்தது.

More articles

Latest article