‘யாவரும் நலம்’, ‘இஷ்க்’, ‘மனம்’, ’24’ உள்ளிட்ட வரவேற்பு பெற்ற படங்களை இயக்கிய விக்ரம் குமார் தற்போது தனது ‘கேங் லீடர்’ படத்துக்குப் பிறகு நாக சைத்தன்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் .

தில் ராஜு தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கு ‘தேங்க் யூ’ என்று பெயரிடப்பட்டுள்ளது .

ஆகஸ்ட் 29 நாகார்ஜுன் பிறந்த நாளன்று மகன் நாக சைத்தன்யாவின் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தில் நாக சைத்தன்யாவுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதைப் படக்குழு அறிவிக்கவில்லை. விரைவில் நடிகர்கள் தேர்வை முடித்து, படப்பிடிப்புக்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறது படக்குழு.