கே.என்.காளை மறைவுக்கு​ ​தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி

Must read

unnamed-2
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் மற்றும் பொருளாளர், மூத்த நடிகர் திரு.கே.என்.காளை அவர்கள் சனிக்கிழமை அன்று இரவு திடீர் மரடைப்பால் காலமானார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் செயற்குழு உறுப்பினரும் டிரஸ்ட்டியுமான திரு.ராஜேஷ், செயற்குழு உறுப்பினர்கள் திரு.மனோபாலா, திரு.எம்.ஏ.பிரகாஷ், திரு.மருதுபாண்டியன், திருமதி.சிவகாமி ஆகியோர்கள் நேற்று அவரது இல்லத்துக்கு சென்று அவரது உடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
திரு.கே.என்.காளை அவர்கள் திரைப்படம் மற்றும் நாடகத்துறையில் அரும்சேவை ஆற்றியவர். அவரது மறைவு கலைத்துறைக்கும் நடிகர் சங்கத்திற்கும் மிக பெரிய இழப்பாகும். அவரது பிரிவால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடையும் தென்னிந்திய நடிகர் சங்கம் பிராத்திக்கிறது. இவ்வாறு நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளது.

More articles

Latest article