‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

வெகுநாள் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்ததையொட்டி, புதிய போஸ்டரை வலிமை தயாரிப்பாளர் வெளியிட்டனர்.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகரான தல அஜித் திரையுலகுக்கு வந்து ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதியுடன் 29 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு சினிமா ரசிகர்களும் தல அஜித் ரசிகர்களும் #29YearsOfAJITHISM என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

இந்த 30வது வருடத்தை முன்னிட்டு வலிமை படத்தின் ’நாங்க வேற மாறி’ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.  தல அஜித் + யுவன் கம்போ என்பதால் இந்த பாடலின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதன்படி, பாடலை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவும், அனுராக் குல்கர்னியும் இணைந்து பாடியுள்ளனர். தல அஜித் அடிக்கடி கூறும் குடும்பத்தை பாருங்கள், எண்ணம் போல் வாழ்க்கை, வாழு வாழவிடு போன்ற ரசிகர்களுக்கு அறிவுரைக்கூறும் வாசகங்களை வைத்து இந்த பாடல் அமைந்துள்ளது.

ஆகஸ்டு 6-ஆம் தேதி முதல் வலிமை படத்துக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. ரஷ்யாவில் நடக்கவுள்ள இந்த படப்பிடிப்புக்காக வரும் ஆகஸ்டு 4-ஆம் தேதி இரவு அஜீத் மற்றும் படக்குழுவினர் ரஷ்யா புறப்படுவதாகவும், ஆகஸ்டு 10-ஆம் தேதி இந்தியா திரும்புவதாகவும் தெரிகிறது.

இந்த பாடல் வெளியானது முதலே யூடியூப்பிலும், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான சிங்கிள் பாடல்களின் முந்தைய சாதனைகளை தகர்த்தும் வருகிறது. குறிப்பாக தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி, வெறித்தனம் பாடல்களின் சாதனைகளை தகர்த்துள்ளது. தற்போது வரை வெளியான 18 மணி நேரத்தில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 931 K லைக்ஸ் உடன் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.