Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் லிப்ட் படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இதனை தவிர Doctor,Beast உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி அசத்தி வருகிறார் கவின்.

இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட கவின் இப்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஆகாஷ் வாணி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெபா மோனிகா ஜான் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். செம ரொமான்டிக் ஆன காதல் கதையாக இந்த சீரிஸ் உருவாகிறது. இதன் ஷூட்டிங் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தொடங்கியுள்ளது.