நாங்க வேற மாறி ; ‘வலிமை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு….!

Must read

‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

வெகுநாள் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்ததையொட்டி, புதிய போஸ்டரை வலிமை தயாரிப்பாளர் வெளியிட்டனர்.

இந்நிலையில் வலிமை படத்தின் அடுத்த அப்டேட் ஆன படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி கசிந்தது.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகரான தல அஜித் திரையுலகுக்கு வந்து வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதியுடன் 29 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு சினிமா ரசிகர்களும் தல அஜித் ரசிகர்களும் #29YearsOfAJITHISM என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

இந்த 30வது வருடத்தை முன்னிட்டு வலிமை படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி அஜித்தின் ‘வலிமை’ பட பாடல் இன்று இரவு 10.45 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.

இந்நிலையில் தற்போது ’நாங்க வேற மாறி’ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.  தல அஜித் + யுவன் கம்போ என்பதால் இந்த பாடலின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதன்படி, பாடலை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

More articles

Latest article