மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் மாதம் 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் மற்றும் அறுபத்து மூவர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு மார்ச் 28ல் கொடியேற்றத்துடன் துவங்கும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் மாதம் 3 ம் தேதி நடைபெறுகிறது.

ஏப்ரல் 4 ம் தேதி அறுபத்துமூவர் வீதியுலா நிகழ்ச்சியும் ஏப்ரல் 6 ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும்.

முன்னதாக மார்ச் 30 ம் தேதி இறைவன் அதிகார நந்தியில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது.