மியான்மார் : ஆங் சான் சுயிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை தண்ட்னை

Must read

நாப்யிடாவ்

முன்னாள் அதிபர் ஆங் சான் சுயிக்கு மியான்மார் நீதிமன்றம் மேலும் 4 ஆண்டுகள் சிறை தனடனை அளித்துள்ளது.

கடந்த 2020 ஆண்டு நடந்த தேர்தலில் மியான்மார் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூயி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆங் சான் சுயி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அவர் மீது ராணுவத்துக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டுவது, கரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல், ஊழல் வழக்குகள் என்று 11 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன. மியான்மார் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.   கடந்த டிசம்பர் மாதம் ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் ஆங் சான் சுயிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மியான்மார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இன்னொரு வழக்கில் ஆங் சான் சுயிக்கு தற்போது மேலும் நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  ஆங் சான் சுயி இல்லட்தில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட அன்று ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லேயிங் தலைமையிலான படைகள் சோதனை நடத்தியபோது, வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றைக் கடத்தல் கருவிகள் என்று கூறி ராணுவம் வழக்கு தொடர்ந்திருந்தது.  மியான்மாரில் உள்ள ஜூண்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இவருக்கு மேலும் நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் மொத்தம் எட்டு ஆண்டுகள் தண்டனை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் மொத்தம் ஆறு ஆண்டுகள் அவர் தண்டனை அனுபவிக்கவுள்ளார்.  தலைநகர் நய்பிடாவில் வீட்டுக் காவலில் ஆங் சான் சூயி இந்த ஆறு ஆண்டு தண்டனை காலத்தையும் அனுபவிக்க முடியும் என்று மியான்மார் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article