சென்னை: பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் விலையை அறிய “எனது விலைப்பட்டியல் எனது உரிமை” திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி  சட்டப்பேரவையில் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் 2022-23ஆம் ஆண்டிற் கான வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்த்தி பல் அளித்து பேசினார்.  அப்போது,

பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள், தவறான ஆவணப் பதிவுகளை கண்டறிந்து சரி செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

வணிக வரி, பதிவுத்துறை அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த ஆண்டுகளை விட வணிக வரித் துறையில் வருவாய் அதிகரித்துள்ளது. போலி பட்டியல் தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக் கிழமையும் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படும் என்றார்.  சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை மட்டும் ரூ 1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். வணிக வரி, பதிவுத்துறை அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

எனது விலைப் பட்டியல் எனது உரிமை” என்ற திட்டம் செயல்படுத்தப்படும். வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள GST மென்பொருள் வாங்கி பயன்படுத்தப்படும்.

இதையடுத்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது அதில்,  முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவில் வருவாய் பங்களிப்பு மற்றும் இதர இனங்கள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  2021-2022 நிதியாண்டில் பதிவுத்துறையின் மூலம் ஈட்டப் பட்ட மொத்த வருவாய் ரூ.13,913.65 கோடி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வருவாய் இதுவரை வசூலிக்கப்படாத அளவுக்கு அதிக அளவிலான வருவா என்றும், இது முந்தைய 2020-2021 நிதியாண்டில் ஈட்டப்பட்ட வருவாயை விட ரூ.3,270.57 கோடி அதிகம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தாக்கல் செய்யப்படமம  வணிகவரித்துறை கொள்கை விளக்க குறிப்பில்  “எனது விலைப்பட்டியல் எனது உரிமை” திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள GST மென்பொருள் வாங்கி பயன்படுத்தப்படும். வணிக வரித்துறையில் வரி ஏய்ப்பை தடுப்பதில் உதவுவோருக்கு வெகுமதி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

பதிவுத்துறையில் கட்டிடக்கலை பணி மேற்கொள்வதற்காக பொறியியல் பட்டதாரிகளுக்கு “களப்பணி மேற்பார்வையாளர் உரிமம்” வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்டும் .

திருமணச் சான்றிதழில் திருத்தம் செய்ய இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் .

பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும்

அரசின் முயற்சி காரணமாக 36 ஆயிரத்து 952 வணிகர்கள் புதிதாக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.