திருச்சி:

ழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித்iதை மீட்கும் பணி 4வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம்  சுர்ஜித் மீட்பு குறித்து விசாரித்ததாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருச்சி அருகில் உள்ள மணப்பாறை பகுதியைச் சேர்ந்த நடுக்காட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் குழாய்க் கிணறில்  2 வயது சிறுவன் சுர்ஜித் தவறி விழுந்து விட்டான். அந்த குழந்தையை மீட்கும் பணியில் தமிழகஅரசு, ஓஎன்ஜிசி, என்எல்சி,எல்டி உள்பட பல தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த பகுதியில் கடுமையான பாறை உள்ளதால்,சுர்ஜித்தை மீட்கும்பணியில் சிக்கல் நீடித்து வருகிறது. பல்வேறு முறைகளில் குழந்தையை மீட்க  கடந்த நான்கு  முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்களில் சேவ் சுர்ஜித் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது. நாடு முழுவதும் குழந்தை சுர்ஜித்தை மீட்க சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆழ்துளை கிணற்றில் சிக்கிய  சுர்ஜித்தை மீட்கும் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார். மேலும் குழந்தையை மீட்க தாம் பிரார்த்திப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.