எனது வேட்பு மனுவை மாற்றிவிட்டனர்….தீபா புகார்

சென்னை:

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜெ.தீபா தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியை சந்தித்து புகார் மனு அளித்தார்.

இது குறுத்து அவர் கூறுகையில், ‘‘நான் வேட்புமனு தாக்கல் செய்தபோது நிராகரிக்க வைப்போம் என தொலைபேசியில் மர்ம நபர்கள் மிரட்டினர். வேட்புமனு தாக்கலின் போது நான் அளித்த விண்ணப்பம் மாற்றப்பட்டுள்ளது. விண்ணபத்தில் 2 தாள்கள் மாற்றப்பட்டுள்ளன. பரிசீலனையின் போது விண்ணப்பம் மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலரை சந்தித்த போது எனது விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட ஆவணங்களை பாதி பாதியாக தந்தார். வக்கீல் உதவியுடன் விண்ணப்பத்தை நிரப்பியதால் தவறாக இருக்க முடியாது. இவ்வளவு முறைகேடுகளுடன் தேர்தல் நடத்துவதற்கு பதில் நடத்தாமலேயே இருக்கலாம்’’ என்றார்.
English Summary
My nomination forms are changed Deepa complaint