எனது குடும்பத்தினர் சிவ பக்தர்கள்!! ராகுல்காந்தி

Must read

அமரேலி:

‘‘எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்’’ என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

குஜராத் சட்டசபைக்கு டிசம்பரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பிரசாத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அமரேலியில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு சென்ற ராகுல் பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார். அதில் ராகுல் இந்து அல்லாதவர் என பதிவிடப்பட்டிருந்தது. இது பா.ஜ.வின் வேலை என காங்கிரஸ் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசுகையில், ‘‘ சோம்நாத் கோயிலுக்கு சென்ற நான் பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்து மட்டுமே போட்டேன். ஆனால் பா.ஜ.கவினர் தான் மத பிரச்னையை குறிப்பிட்டு விஷமம் செய்துள்ளனர். மதத்தின் மீதான நம்பிக்கை தனிப்பட்ட விஷயம். நாங்கள் மதத்தை வைத்து வியாபாரம் செய்யவில்லை. நான் எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள் தான்’’ என்றார்.

More articles

Latest article