குஜராத்துக்கு படேல் சமூகத்தில் இருந்து முதல்வர் வேட்பாளர்!! பாஜக திட்டம்

Must read

ஆமதாபாத்:

குஜராத்தில் படேல் சமூகத்தை சேர்ந்தவரை பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

குஜராத்தில் மாநிலத்தில் பாஜக.வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் பட்டேல் இடஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர் ஹர்த்திக் பட்டேல் இணைந்துள்ளார். படேல் சமூகத்தினரை தன்வசம் இழுக்கும் வகையில் அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவரை தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

படேல் வாக்காளர்களை கவரும் வகையில் குஜராத் மாநில துணை முதல்வர் நிதின் படேல் ஒரு சிறந்த முதல்வர் வேட்பாளராக கருதப்படுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. பிரசாரம் 7-ம் தேதியுடன் முடிகிறது.

More articles

Latest article