நியூயார்க்: தான் ஒரு சுதந்திர நாட்டின் அதிபர் என்பதால் தனக்கு யாரும் அழுத்தம் தர இயலாது என்றும், தனக்கு அழுத்தம் தரவல்ல ஒரே நபர் தனது 6 வயது மகன்தான் என்றும் நகைச்சுவையாக கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி.

இவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக பிரபல நகைச்சுவைக் கலைஞராக அறியப்பட்டவர். ஐநா பொதுச்சபை கூட்டத்தையடுத்து இவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

ஒபாமா அரசில் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் மீது ஊழல் வழக்கு விசாரணையைத் துவங்கியுள்ளது டிரம்ப் அரசு. டொனால்ட் டிரம்பின் மீது அந்நாட்டு காங்கிரஸில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர், கண்டனத் தீர்மான விசாரணை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடன் துணை அதிபராக இருந்தபோது அவரின் மகன், உக்ரைன் நிறுவனத்திற்காக வேலை பார்த்தார். அந்த நிறுவனம் தொடர்பாக ஊழல் நடந்துள்ளதாய் விசாரணையைத் துவக்குமாறு உக்ரைன் அதிபர் செலன்ஸிக்கு, டிரம்ப் தரப்பில் அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுவதாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துதான் மேற்கண்ட வகையில் நகைச்சுவையாக பேசியுள்ளார் உக்ரைன் அதிபர்.