ரியாத்

வுதி அரேபிய அரசு முதல் முறையாகச் சுற்றுலா விசா வழங்க முடிவு செய்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வளம் காரணமாகப் பணக்கார நாடுகளில் ஒன்றாக விளங்கி வந்தது.  இந்நாடு இஸ்லாமிய நாடு என்பதால் பல கட்டுப்பாடுகள் இருந்து வந்தன.  தற்போதுள்ள பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல சீர்திருத்த நடவடிக்கைகளை விஷன் 2030 என்னும் திட்டத்தின் கீழ் நடத்தி வருகிறார்.

முக்கியமாக அந்த நாட்டில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம், விளையாட்டு அரங்குக்கு வர அனுமதி போன்ற அறிவிப்புக்கள் புரட்சிகரமாகக் கருதப்பட்டன.

தற்போது முகமது பின் சல்மான் சவுதி அரேபியாவில் சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா விசா அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.   தற்போது நாட்டின் ஒட்டுமொத்த வருவாயில் 3% அளித்து வரும் சுற்றுலாத்துறையின் வருவாயை 10% ஆக உயர்த்த 49 நாடுகளைச்  சேர்ந்த சுற்றுலாப்பயணிகளுக்குச் சுற்றுலா விசா அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் இந்த சுற்றுலா விசாவின் மூலம் மெக்கா, மதீனா ஆகிய இடங்களுக்குச் செல்ல முடியாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.