மெரினா போராட்டத்தின்போது எற்பட்ட வன்முறையை மெரினா புரட்சி என்ற ஆவணப்படமாக எம்.எஸ்.ராஜ் இயக்கினார். போட்டுக்காட்டும் விதமாக படமாக்கியிருந்தார் எம்எஸ்.ராஜ்.

அதேபோலத்தான் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ‘முத்துநகர் படுகொலை’ என்கிற பெயரில் விறுவிறுப்பான திரைப்படம் போன்ற ஒரு ஆவணப்படமாக இயக்கியுள்ளார்.

படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன், திரைக்கலைஞர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் பேசும்போது. “தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுள்ளது இப்படம். இந்த படத்தை எடுக்கிறோம் என்கிற செய்தி தெரிந்ததுமே அடுத்த இரண்டாவது நாளே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் என் மீது காவல் நிலையத்தில் புகார் செய்தாது. உடனே போலீஸாரும் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டுமென சம்மன் அனுப்பினார்கள். எந்த சட்டப்பிரிவில் இப்படி சம்மன் அனுப்பி இருக்கிறீர்கள் என்று நான் கேட்டதும் அதன்பிறகு அவர்களிடம் பதில் இல்லை” என்றார்.

வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன், “படத்தில், உண்மையை அப்படியே பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ். ஒரு தனியார் நிறுவனத்தை பாதுகாப்பதற்காக அதிகாரவர்க்கம் என்னென்ன முயற்சிகள் செய்தன. காவலர்கள் சாதாரணமாக வைத்திருக்கும் ரைபிளில் இருந்து தான் சுட வேண்டும் அவர்களுக்கு ஸ்னைப்பர் என்கிற துப்பாக்கியை வழங்கியது யார் ? இதில் கொல்லப்பட்ட அனைவருமே குறிபார்த்து சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஸ்டெர்லைட் நிறுவனம் பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எத்தனை கோடி தேர்தல் நிதி வழங்கியது என்பது குறித்த தகவலையும் கூறியுள்ளார்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, “நடைபெற்றது மக்கள் படுகொலை மட்டுமல்ல.. சுற்றுச்சூழல் படுகொலையும் தான்.. ஆலை முதலாளிகள் அரசாங்கத்தையே விலைக்கு வாங்க முடியும் என்பதை காட்டும் விதமாக நடந்த நிகழ்வுதான் இது” என்று கூறினார்.

படத்தின் வெளியீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என இயக்குநர் எம்.எஸ்.ராஜ் தெரிவித்தார்.