முசோரி

முசோரி வணிகர்கள் சங்கம் காஷ்மிர் மாநில துணி வியாபாரிகளை நகரத்தை விட்டு செல்ல உத்தரவிட்டுள்ளது.

முசோரி ஒரு சுற்றுலா நகரம் என்பதால் இங்கு பலவகை வணிகர்களும் உள்ளனர்.  அதே நேரத்தில்  பல மாநில வணிகர்களும் உள்ளனர்.   இது ஒரு குளிர் பிரதேசம் என்பதால் காஷ்மீர்  மாநிலத்தில் இருந்து கம்பளித்துணிகளும் பல வகை குளிர்கால ஆடைகளும் விற்கும் வியாபாரிகள் இங்கு அதிக அளவில் உள்ளனர்.   இவர்கள் நகரின் பல பகுதிகளிலும் கடைகளை வாடகைக்கு எடுத்த் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் 18ஆம் தேதி சாம்பியன் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி இட்டன.   அதில் இந்தியா தோல்வி அடைந்ததும்  இங்குள்ள காஷ்மிர் வியாபாரிகள் “பாகிஸ்தான் ஜிந்தாபாத் (பாகிஸ்தான் வாழ்க)”  எனக் கோஷம் இட்டதாக தகவல்கள் வந்தன.   அதன் பிறகு இரு நாட்கள் கழித்து முசோரி வணிகர் சங்கம் ஒரு கூட்டம் நடத்தியது.

கூட்ட இறுதியில் சங்கத் தலைவர் ரஜத் அகர்வால்  “இது போல தேச விரோத வியாபாரிகளால்  மதக் கலவரம் ஏற்பட வாய்ப்புண்டு.   எனவே காஷ்மீர வியாபாரிகள் வரும் 2018ஆம் வருடம் பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்த ஊரை வீட்டு வெளியேற வேண்டும்.    இது ஒரு சிறு நகரம்.   இங்கு 18 காஷ்மீர் மாநில வியாபாரிகள் உள்ளனர்.    இதனால் இங்குள்ள உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப் படுகின்றனர்”  என தெரிவித்தார்.

அதன் பிறகு முசோரி காவல்துறை  இவ்வாறு கோஷமிட்டது மூவர் எனவும் அதில் இருவர் காஷ்மீர் மாநில வியாபாரிகள் இல்லை எனவும் தெரிவித்தனர்.   இது குறித்து காஷ்மீர் வியாபாரிகள் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் கணேஷ் ஜோஷிக்கும், உத்தரகாண்ட் பாஜக தலைவர் அஜய் பட்டுக்கும் கடிதங்கள் அனுப்பி உள்ளனர்.   தாங்களும் இதே நாட்டவர் தான் என்பதால் நாட்டில் எந்த பாகத்திலும் வியாபாரம் நடத்த உரிமை உள்ளதால் இவர்கள் இதில் தலையிட வேண்டும் என கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த காஷ்மீர் வியாபாரிகளின் கடைகளின் வாடகை ஒப்பந்தம் இந்த மாதம் இறுதியில் முடிவடைகிறது.    ஆனால் உரிமையாளர்கள் ஒப்பந்தத்தை புதிப்பிக்க மறுத்துவிட்டனர்.     இது குறித்து வியாபாரிகள் சங்கத் தலைவர் அகர்வால், “ஒப்பந்தம் முடிந்தவர்கள் உடனடியாக முசோரியை விட்டு வெளியேற வேண்டும்.  ஒப்பந்தம் முடியாதவர்களின் ஒப்பந்தன்ங்களை கடை உரிமையாளர்கள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ”  என கூறி உள்ளார்.