சென்னை

டிவிட்டர் பதிவு ஒன்றில் இஸ்லாமிய மக்கள் பாஜக வெற்றி பெற உதவ மாட்டார்கள் எனப் பதியப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.  இதையொட்டி டிவிட்டர் உள்ளிட்ட் சமூக வலைத் தளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இஸ்லாமிய ஆர்வலரான ஷஃபீக் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில்,

“இஸ்லாமிய மக்கள் தெளிவடைந்து வருகிறார்கள்.இனிமேலும் பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்கும் எந்த கட்சிக்கும் வாக்களித்து தங்கள் ஓட்டுக்களை வீணாக்கி பாஜக வெற்றிபெற உதவப்போவதில்லை.அது இஸ்லாமியக் கட்சியாக இருந்தாலும் சரி.

வரும் தேர்தலில் பாஜக-வின் பி டீம் நாம் தமிழர் கட்சியும் நிராகரிக்கப்படும்.” 

எனத் தெரிவித்துள்ளார்.