ஆர் கே சுரேஷ் எழுதிய இயக்கி நடிக்கப் போகும் தென் மாவட்டம் படத்தின் போஸ்டர் வெளியானது.

இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தென் மாவட்டம் படத்திற்கு இசையமைக்கப் போவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள யுவன் சங்கர் ராஜா “நான் தென் மாவட்டம் படத்தில் பணியாற்றவில்லை, யாரும் இதுவரை பணியாற்ற என்னை அணுகவும் இல்லை என அதிரடியாக பதிவிட்டுள்ளார்”

இந்த பதிவு வைரலான நிலையில், இதனை பார்த்து பதறி அடித்த ஆர்கே சுரேஷ் யுவன் சார் நீங்கள் இந்த திரைப்படம் மற்றும் லைவ் concert -க்கு ஒப்பந்தம் செய்துள்ளீர்கள் ஒப்பந்தத்தை தயவு செய்து சரி பார்க்கவும் என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பான வழக்கில் சில மாதம் தலைமறைவாக இருந்த ஆர்.கே. சுரேஷ் தற்போது மீண்டும் படமெடுக்க துவங்கி இருக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜா குறித்த பதிவு கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.