ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு நடிக்கும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’ .

இதில் அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும், இதில் பாக்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்ரவர்த்தி, எடிட்டராக ஜோமின் மேத்யூ, கலை இயக்குநராக நர்மதா வேணி, இசையமைப்பாளராக தரண் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ஏதோ சொல்ல பாடல் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தரன் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது.