மும்பையில் உள்ள பிரபலமான ஹாஜி அலி தர்காவில் கருவறைக்குள் பெண்கள் நுழைய, நிர்வாகிகள் விதித்திருந்த தடையை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஹாஜி அலி தர்கா 15ஆம் நுற்றாண்டில் கட்டப்பட்ட  சூபி மத வழிபாட்டுத்தலம் ஆகும். இந்த தலத்தை நிர்வகித்து வரும் அறக்கட்டளையினர்,  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, “தர்காவின் கருவறைக்குள் (சமாதி இருக்குமிடம்) பெண்கள் வரக்கூடாது” என்று தடை விதித்தனர்.  “ஆண் துறவிகளின் சமாதியை பெண்கள் தொட அனுமதிப்பது பெரும் பாவம்’ என்று அதற்கு விளக்கமும் அளித்தனர்.
a
இது குறித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், “ஹாஜி அலி தர்கா வழிபட்டு தலத்தில் பெண்கள் மீது பாரபட்சம் காட்டுவது  அரசியல் சட்டத்தை மீறுவதாகும். ஆகவே பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வகிறோம்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
சாதி பேதம் காரணமாக அனைவரும் அர்ச்சகராக முடியாத நிலை இந்து மத வழிபாட்டுத்தலங்களில் நிலவுகிறது.  இந்த நிலையில் வழிபாட்டுத்தலத்தில் பாரபட்சம் காண்பிப்பது தவறு என்ற மும்பை நீதிமன்ற  தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ,