மும்பை குண்டுவெடிப்பு: அபுசலிம் உள்பட 6 பேர் குற்றவாளிகள்!

INDIA/

மும்பை,

லகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீம் உள்பட 6 பேர் குற்றவாளிகள் என்று மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

24 ஆண்டுகளுக்கு பிறகு தடா நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

1993 ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதல்களில்  257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பான வழக்கு 24 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் என கருதப்பட்டவர்களில் பலர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், முதலில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து 2006ம் ஆண்டு  100 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

தொடர்ந்து குற்றவாளிகளை தேடும் படலம் நடைபெற்றதான் வாயிலாக  2010 ம் ஆண்டு வரை மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் 24 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தீர்ப்பில்  அபு சலீம் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்று மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றம் நிருபிக்கப்படாததால் ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். குற்றவாளியான 6 பேரும் தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் ஆவர். தண்டனை குறித்த விவரம் இன்னும் வெளியாக வில்லை.

 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை அடுத்து, கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags: Mumbai serial blasts: 6 accused including Abu Salem, TADA Court order, மும்பை குண்டுவெடிப்பு: அபுசலிம் உள்பட 6 பேர் குற்றவாளிகள்!