சன்டிகர் ஐஐடி முன்னணி: அதிக சம்பளத்தில் ஐஐடி மாணவர்களை அள்ளும் வெளிநாட்டு நிறுவனங்கள்!

Must read

சன்டிகர்:

பிரபல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் ஐஐடியில் படித்து வரும் மாணவர்களை தங்களது நிறுவனங்களில் பணிக்காக அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்து வருகிறது. இதில், சன்டிகரில் உள்ள ஐஐடி முன்னணியில் திகழ்கிறது. இங்கு பிரபலமான மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக மாணவர்களை தேர்வு செய்து வருகிறது.

கடந்த ஆண்டு சென்னை ஐஐடியில் படித்த மாணவர்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் சம்பள பேக்கேஜில் 10 பேரை தேர்வு செய்த வெளிநாடு நிறுவனங்கள் , இந்த ஆண்டு சன்டிகரில் உள்ள ஐஐடியில் ஏராளமான மாணவர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளது.

உலகின் முன்னணி ஐடி நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து, சன்டிகர் யுனிவர்சிட்டியில் இருந்து தங்களது நிறுவனத்துக்கு மாணவர்களை  தேர்வு செய்து வருகிறது. மேலும் பல முன்னணி நிறுவனங்களும் சன்டிகர் ஐஐடி மாணவர்களை தேர்வு செய்ய முகாமிட்டு வருகிறது. சன்டிகர் ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள்,  வேலைவாய்ப்பு பெறுவதில் முன்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில்,  மற்றொரு புறம் திறமையான மாணவர்களை தேடி  பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முகாமிட்டு, ஐஐடி மற்றும் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் திறனை பரிசோதித்து தேர்வு செய்து வருகின்றனர்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு எதிர்பார்க்கப்படும் கவர்ச்சிகரமான ஊதியம் உள்பட  பல வசதிகள் கிடைக்கும் நிலையில், பெரும்பாலானவர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியவே  ஆசைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

More articles

Latest article