முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மேலும் மேலும் மனுக்களை போட வேண்டாம்! உச்சநீதிமன்றம்

Must read

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மேலும்  மேலும்  மனுக்களை பெருக்க வேண்டாம் என்று அனைத்து பிரச்னைகளும்  பரிசீலிக்கப்படும் என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

முல்லை பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும், அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. இந்த அணையின் மொத்த கொள்ளவு 15.5 டி.எம்.சி , உயரம் 155 அடி ஆகும். இந்த அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இதை ஏற்க மறுத்து வரும கேரள மாநில அரசு,அவ்வப்போது புதுபுதுப்மனுக்களை தாக்கல் செய்து, அணை குறித்து வதந்திகளை பரப்பி வருகிறது.

இதுதொடர்பாக பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த விசாரணையின்போது,  முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்புப் படையை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் கண்டிததுடன், அணைக்கு தேவையான முக்கிய விஷயங்கள் குறித்து விசாரணையின்போது  பரிசீலிக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், இன்றைய விசாரணையின்போது, புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் மனுக்களை பெருக்க வேண்டாம், அனைத்து பிரச்னைகளும்  பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்தது.

இந்த வழக்கு இன்று  நீதிபதிகள் ஏ எம் கன்வில்கர் மற்றும் சி டி ரவிக்குமார் பெஞ்ச்சில் விசாரிக்கப்பட்டது. அப்போது,  முல்லைபெரியாறு அணை விவகாரத்தை ஏன் பெருக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அனைத்து சிக்கல்களும் பரிசீலனையில்  உள்ளன, அவை பரிசீலிக்கப்படும்” என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகினிடம் பெஞ்ச் கூறியது.

‘முந்தைய விசாரணையின்போது,  தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவில், அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாகவும், போராட்டக் காரர்கள் தற்போது தங்கள் நிலைப்பாட்டை “கடினப்படுத்தி” புதிய அணை கட்டப்பட வேண்டும் என்றும் கோருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுபோல, உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், முல்லைப் பெரியாறு அணையின் உயர்மட்ட அளவை செப்டம்பர் 20ஆம் தேதி 142 அடியாக நிர்ணயம் செய்யும் திட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், “அணை நீரியல் ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் மற்றும் நில அதிர்வு ரீதியாகவும் பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு கூறியது.

More articles

Latest article