எழுத்தாளர் பெருமாள் முருகனின் புகைப்படத்தை டெல்லி மாநில நல திட்ட பயனாளியாக சித்தரித்த பா.ஜ.க.

Must read

டெல்லியில் உள்ள கீர்த்தி நகர் பகுதியில் உள்ள ஜவஹர் கேம்ப்பைச் சேர்ந்த குடிசை பகுதி மக்களுக்கு நல திட்டங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

விழாவுக்கான வரவேற்பு பதாகைகள் மற்றும் விளம்பரங்களை பிரமாண்டமாக செய்திருந்தது பா.ஜ.க.

நல திட்ட பயனாளிகளின் புகைப்படத்துடன் வெளிவந்திருக்கும் இந்த விளம்பரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பெருமாள் முருகனின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோஷாப் மூலம் இளைஞர்களை தவறாக வழிநடத்தி பா,ஜ.க. ஆட்சியை பிடித்தது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் நொய்டா விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு சீனாவின் பெய்ஜிங் நகர விமான நிலைய புகைப்படத்தை போட்டோஷாப் செய்து பயன்படுத்தியது உலக அளவில் பா.ஜ.க. அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியது.

தற்போது, எந்த விமர்சனத்தையும் கவலைப்படாமல் தங்களது போட்டோஷாப் வேலையே பா.ஜ.க. வினர் தொடர்ந்து செய்துவருவது சமூக வலைத்தளங்களைத் தாண்டிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article