டெல்லி: ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலம், உலக பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திலும் இருந்த அதானி, ஹிண்டன்பர்க் அறிக்கையால், உலக பணக்காரர்கள் பட்டியலில் 15வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், ஆசிய பணக்காரர்கள் பட்டியலிலும் பின்னுக்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி நிறுவனங்கள் தொடர்பாக  கடந்த ஜனவரி 24-ந் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில், அதானி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது என்றும், எங்களது கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தது. இதையடுத்து, அதானி நிறுவன பங்குகள் கடுமையான சரிவைகளை சந்தித்தது.  அதன் பாதிப்பு காரணமாக,  கவுதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து . இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த கவுதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின. 4,400 மோடி டாலர்களை (சுமார் ரூ.3.60 லட்சம் கோடி) இழந்து, அப்பட்டியலில் 7,508 கோடி டாலர்களுடன் (சுமார் ரூ.6.14 லட்சம் கோடி) தற்போது 15-வது இடத்தில் உள்ளார்.  ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 8,370 கோடி டாலர்கள் (சுமார் ரூ.6.84 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.

இந்த நிலையில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கவுதம் அதானி அந்த இடத்தை இழந்தார். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

ஏற்கனவே பல ஆண்டுகளாக ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த அம்பானி, அதானி நிறுவனத்தின் திடீர் வளர்ச்சி காரணமாக பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார்.

அதானியின் பங்குகளில் பெரும் சரிவுட ஏற்பட்டுள்ளது. அதாவது  28 சதவிகிதம் அதனால்  அதானியின் சொத்து $ 72 பில்லியனாக சரிந்தது, அதே நேரத்தில் அம்பானி $ 81 பில்லியனாக இருந்தது. இதனால் அம்பானி மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார்.