முகலிவாக்கம் சிறுமி ஹாசினி கொலை குற்றவாளிக்கு ஜாமின்!

Must read

சென்னை,

மிழகத்தையே உலுக்கிய  சென்னை முகலிவாக்கம்  7வயது குழந்தையான ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர குற்ற வாளி ஜஸ்வந்துக்கு சென்னை ஐகோர்ட்டு பெயில் வழங்கி உள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 8ந்தேதி முகலிவாக்கம், மாதாநகரைச் சேர்ந்த 7 வயதே ஆன ஹாசினி என்ற சிறுமி மாயமானார். இரண்டாவது படித்து வந்த மாணவி தான் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடியபோது திடீரென்று காணாமல் போனார்.

இதுகுறித்து அவரின் தந்தை பாபு காவல்துறையில் புகார் அளித்தார். 4 நாட்களுக்கு பிறகு ஹாசினியின் பாதி எரிந்த நிலையில் தாம்பரம் பைபாஸ் ரோட்டில் கண்டெடுக்கப்பட்டது.

போலீசாரின் விசாரணையை தொடர்ந்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து எரித்தது அதே  அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் வசித்து வந்த  ஜஸ்வந்த் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று அந்த சிறுமியை பாலியல் வன்முறை செய்ய முயன்றபோது, அலறிய சிறுமி யின் முகத்தில் தலையணையை வைத்து  அமுக்கி மூச்சை நிறுத்திக் கொன்றிருக்கிறார். பின்னர், சிறுமியின் உடலை ஒரு பேக்கில் போட்டு தாம்பரம் பைபாஸ் ரோடு அருகே சென்று யாரும் இல்லாத நேரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

பரபரப்பான இந்த கொலையில், குற்றவாளி ஜஸ்வந்த் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது  அவருக்கு பெயில் வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினியின் தந்தை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுபோன்ற கொடூர குற்றவாளிகள் வெளியே வந்தால், மேலும் இதுபோல குற்றங்களில் ஈடுபட மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாரம் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஹாசினியை கொலை செய்த ஜஸ்வந்த்-ஐ குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று அவரது தந்தை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

அப்போது, ஜஸ்வந்த் கைது செய்யப்பட்ட உடனே அவரது தந்தை செங்கல்பட்டு கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்ததாகவும், அதன்பிறகே போலீசார் அவர்மீது குண்டர் சட்டத்தை போட்ட தாகவும் கூறப்பட்டது.

ஜஷ்வந்த்தை  குண்டர்கள் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.   இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 90 நாட்களுக்குள், அதற்கான ஆவனங்கள்  தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், போக்சோ (POCSO) சட்டத்தில் கைது செய்ததற்கான விவரங்கள் எதுவும் போலீசார் தாக்கல் செய்யாததால், அவரை விடுதலை செய்வதாக கூறப்பட்டது.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில்,  நீதிபதி செல்வம் மற்றும் நீதிபதி கலையரசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசார் துஷ்யந்தின் தந்தையின் மனுவுக்கு பதில் தாக்கல் செய்யாமல்  வழக்கை தாமதப்படுத்துவதாக  குற்றஞ்சாட்டியது. இது, மனுதாரரின் உரிமைக்கு எதிரானது என்று மேலும் கூறினார்.

மேலும், ஹாசினி கொலை வழக்கில், ஐதராபாத்தில் இருந்து வந்த டி.என்.ஏ முடிவுகள், பாலியல் தாக்குதலுக்கும் கொலைக்கும் பின்னணியில் ஜஸ்வந்த்  இருப்பதாக நிரூபிக்க  முடியவில்லை என்றும் கூறி உள்ளது.

இந்த வழக்கில் ஜஸ்வந்துக்கு ஆதரவாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கறிஞரான பி.குமார் வாதாடியது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article