‘விசில் போடு’…. 2022 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியில் தோனி…

Must read

துபாய்: நான் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை; அடுத்த ஆண்டு (2022) ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை அணியில் தொடர்வேன் என கேப்டன் டோனி தெரிவித்துள்ளார். இது சிஎஸ்கேஅணி ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் 4முறை வெற்றிக்கோப்பை ருசித்துள்ளது தமிழ்நாட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2020 ஐபிஎல் போட்டியில் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் போன தோனி படை, இந்த ஆண்டு எப்படியும் கோப்பையை சேல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே, கேப்டன்சிப் பதவி மற்றும்  சில போட்டிகளிலும் இருந்து விலகிய மகேந்திர சிங் தோனி, இந்த ஆண்டுடன் ஐபிஎல் போட்டியிலும் இருந்து விலகுவார் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அதை பொய்யாக்கும் வகையில்,  4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள தோனி, அடுத்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியில் தொடர்வேன் என்று அறிவித்து உள்ளார்.

2022ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் புதிதாக 2 அணிகள் அறிமுகமாக உள்ள நிலையில், பி.சி.சி.ஐ.யின் முடிவை பொறுத்து தனது ஐ.பி.எல். எதிர்காலம் அமையும் என தெரிவித்தார். சென்னை அணிக்காக விளையாடுவது என்பதை விட அணிக்கு எது சிறந்தது என பார்க்க வேண்டுமென தெரிவித்தார்.

ன்னை அணியில் நீங்கள் விட்டுச் சென்ற மரபு குறித்து பெருமைப்படுகிறீர்களா என கேள்வி எழுப்பியதற்கு, நான் இன்னும் சென்னை அணியை விட்டுச் செல்லவில்லை என சிரித்தபடியே தோனி தெரிவித்தார்.

நேற்று நடந்த இறுதி போட்டியையும் சேர்த்து ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில், 300 ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பு வகித்த ஒரே வீரர் என்ற சிறப்புக்கு கேப்டன் தோனி சொந்தக்காரர் ஆனார்.

More articles

Latest article