இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் கோட்டபயவுக்கு எதிராக ‘கோ ஹோம் கோட்டா’ என எம்.பி.க்கள் கூச்சல்! வீடியோ

Must read

கொழும்பு: கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கி தவிக்கும் இலங்கையில், தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, அவருக்கு எதிராக ‘கோ ஹோம் கோட்டா’ என எம்.பி.க்கள் கூச்சல் போட்டனர். இதையடுத்து சிறிது நேரத்தில் கோட்டபய ராஜபக்சே அவையில் இருந்து வெளியேறினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு, அதிலிருந்து வெளியேற உலக நாடுகளின் உதவியை பெற்று வருகிறது. ஏற்கனவே இந்தியா மற்றம் தமிழகம்  தரப்பில் பெருவாரியான உதவிகள் வழங்கப்பட்டுஉள்ளது.

இந்த நிலையில், இன்று  இலங்கை நாடாளுமன்றில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை யின் முடிவுகள் கூறி அறிக்கை வெளியிட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று நாடாளுமன்றில் அறிவித் திருந்தார்.

அதன்படி, இன்றைய கூட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடன் அதிபர் கோட்டபய ராஜபக்சேவும் வருகை தந்திருந்தார்.  அத்துடன் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து கோட்டபய ராஜபக்சே, அவையில் உரையாற்றினார. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோ கோம் கோட்டபய என தொடர்ந்து கோஷமிட்டனர். எதிர்க்கட்சியினரின் போராட்டத்தினால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால், சிறிது நேரம் உரையாற்றிய கோட்டபய அங்கிருந்து வெளியேறினார்.

இதன் காரணமாக சபாநாயகர் சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார்.

இதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில்,  சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை சாதகமாக நிறைவடைந்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டின் அபிவிருத்திக்காகவே நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசினோம். ஆனால் இம்முறை அவ்வாறு அல்ல,  நாட்டை மீட்டெடுப்பதற்காகவே நாங்கள் பேச்சுவாரத்தை நடத்தி யுள்ளோம். பல்வேறு கட்டங்களின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. தற்போது எமது நாடு எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கே அதிகளவு பாதிப்பை எதிர்கொண்டுள்ளது என கூறியவர்,   எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதியை வலுவடையச் செய்யும் நோக்கில் பணம் அச்சிடுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

More articles

Latest article