டில்லி:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான பாலக்கோட்டில் உள்ள ஜாபா ( Balakot) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் விவரங்கள் குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின்  வெளியுறவுத்துறைக்கான நிலைக்குழு, இந்திய வெளியுறவுத்துறை செலரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

விசாரணையை தொடர்ந்து, வெளியுறவுத்துறை செயலர் தவறான தகவல்களை தெரிவிப்பதாக குற்றம் சாட்டினர்.

கடந்த பிப்ரவரி மாதம் 14ந்தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடைபெற்ற ஜெய்ஷ்இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பினரின்  தற்கொலைப்படையின் வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். இதையடுத்து, கடந்த மாதம் (பிப்ரவரி) 26ந்தேதி அதிகாலை 3.30 மணி அளவில் இந்திய விமானப்படையினர், ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பினர் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தி முகாம்களை கூண்டோடு அழித்தனர்.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமானப்படை விமானத்தை தாக்கி அழித்த போது விபத்துக்குள்ளான இந்திய விமானியின் மிக் ரக விமானமும் பாதிக்கப்பட, அதிலிருந்து பாராசூட் உதவியுடன் குதித்த விமானி  அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப் பட்டார். பின்னர் இந்தியா மற்றும் சர்வதேச அழுத்தம் காரணமாக அபிநந்தன் விடுதலை செய்யப் ப்பட்டு, நேற்று இரவு இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.

இந்த விவகாரங்கள் நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், பாராளு மன்ற வெளியுறவு விவகாரங்களுக்கான நிலைக்குழழு உறுப்பினர்கள், இந்திய வெளியுறவுத் துறை செயலாளரை வரவழைத்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

பாராளுமன்ற நிலைக்குழு முன்பு,. இந்திய வெளியுறவுத்துறை செயலர் கோகலே மற்றும் மூத்த அதிகாரிகள் ஆஜராகினர். அவர்களிடம் நிலைக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அவர்களிடம் விளக்கம் தெரிவித்த கோகலே, பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதல் மிகப்பெரியதுமானதுடன்  மிக கொடூரமானது என்பது குறித்து விவரித்தனர். அதன் காரணமாகவே பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்தது என்றனர்.

அப்போது, கூறிய உறுப்பினர்கள், பாலகோட் தாக்குதல்  இந்திய அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தை ஏன் உலக நாடுகளிடம் எடுத்துச் செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், பாலகோட் தாக்குதலின்போது என்ன நடந்தது, பயங்கரவாதிகள் எத்தனை பேர் கொல்லப் பட்டனர் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

ஆனால், அதற்கு கோகலா தலைமையிலான குழுவினர் பதில் தெரிவிக்க மறுத்து விட்டனர்.   அது குறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்றும், பாலகோட் தாக்குதலில் பலியானர்கள்  குறித்த விவரங்கள் குறித்த கேள்விக்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்தியா நடத்திய  விமானத் தாக்குதல்களுக்கு நியாயப்படுத்தவும் மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத்தை பரப்புவதில் ஜெய்ஷ்இமுகமது அமைப்பது செய்து வரும் முயற்சிகள் குறித்தும் விரிவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை செயலாளர் தவறான தகவ்லகளை தெரிவிப்பதாக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.