‘மொட்ட சிவா …ரொம்ம்ம்ம்ப நல்ல சிவாடா’ நடிகர் லாரன்சுக்கு இளைஞர்கள் நன்றி!

Must read

இளைஞர்கள் மத்தியில் நடிகர் ராகவா லாரன்ஸ்

சென்னை,

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் அமைதி போராட்டத்துக்கு நடிகர் லாரன்ஸ் தனது முழு ஆதரவை தெரிவித்து வருகிறார்.

தற்போது சென்னை மெரினாவில் கூட்டம் அலைமோதி வருகிறது. கடற்கரை முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் தலைகளே காணப்படுகிறது.

போராட்டத்தில்  ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு தேவையான உணவுக்கும், குடிநீருக்கும் ரூபாய் 1 கோடி வரை செலவு செய்ய தயார் என்று பிரபல தமிழக நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

அவருக்கு நன்றி தெரிவித்து, முகநூல் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் ‘மொட்ட சிவா …ரொம்ம்ம்ம்ப நல்ல சிவாடா!’, நமது வடசென்னை பச்சை தமிழனுக்கு நன்றி’ என்று தங்களது நன்றியை தெரிவித்து வருகிறார்கள் இளைஞர்கள்.

பத்திரிகை.காம்-மும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது அந்த பச்சைத்தமிழனுக்கு….

போர்க்களம் போல் காட்சியளிக்கும் மெரினாவில் கூடியுள்ள பெருங்கூட்டம்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article