சிவகங்கை மாவட்டம், தங்கள் சாதியினர் வளரக்கும் மாட்டை, தேவேந்திரகுள வேளாளர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடக்கியதால், அவர்களை  சீர்மரபினர் சாதியைச் சேர்ந்தவர்கள் அரிவாளால் பெரும் பதட்டம் நிலவுகிது.

சிவகங்கை மாவட்டம்  சிங்கம்புணரி வட்டம் காளாப்பூர் கிராமத்தில்  கடந்த 15-1-2017 அன்று மஞ்சுவிரட்டு நடந்தது.இதில்   சிங்கம்புணரி கிழக்குதெருவை சேர்ந்த சீர்மரபினருக்குச் சொந்தமான காளையை தேவேந்திரகுல வேளாளர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அடக்கினர்.

இதையடுத்து, அன்று மாலை, சீர்மரபின சாதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 80 பேர், தேவேந்திரகுலவேளாளர் வசிக்கும் பகுதிக்கு கொடூர ஆயுதங்களோடு வந்தார்கள். தேவேந்திரகுல இளைஞர்கள் பெண்கள் உள்பட நான்கு பேரை அரிவாளால் கொடூரமாக  வெட்டினர்.  அதோடு, “பள்ளர்கள் எப்படி எங்கள் சமுதாய மாட்டை அடக்கலாம்.   இனிமேல் எங்கள்  சாதியினர் வளர்க்கும் மாட்டை பிடிக்கநினைத்தால் ஊரோடு அனைவரையும் அழித்துவிடுவோம்” என்று  மிரட்டிச் சென்றனர்.

காயம் அடைந்தவர்கள் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனார். மேலும் இது தொடர்பாக சதூர்வேதிமங்கலம் (S.V.மங்கலம்) காவல்துறையினர் (குற்றஎண் 4/2017) வழக்கு பதிவுசெய்து 80 பேர் அடங்கிய கும்பலில் 22பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட தேவேந்திரகுல மக்கள் 14பேர் மீதும் பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர்.