சென்னை: வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்க  சென்னை மாநகராட்சி  நடவடிக்கை எடுத்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் ஜுன் 1ந்தேதி கல்வி நிலையங்கள்  கோடை விடுமுறை முடிந்து தொடங்கும் நிலையில், புதிதாக பள்ளிகளில் சேரும் மாணவ மாணவிகளுக்காக வாட்ஸ் அப் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என சென்னைமாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொதுவாக பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கான  பிறப்புசான்றிதழ் பெற சம்பந்தப்பட்ட  அலுவலர்களை சந்திப்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுவந்தனர். மேலும் கையூட்டும் வழங்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது, அவற்றை தவிர்க்கும் வகையில் பெற்றோர்கள் வீட்டில் இருந்தே குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,  94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு பெற்றோர் தகவல் அனுப்பி பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  அதன்படி, பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு  பிறப்பு சான்றிதழி பிடிஎஃப் வடிவில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் உடனே அமலுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

[youtube-feed feed=1]