History Of Buddhism

ரோடா

குஜராத் மாநிலம் முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட தலித்துகள் புத்தமதத்துக்கு விஜயதசமியான நேற்று மாறி உள்ளனர்.

நேற்றைய தினம் இந்துக்களால் விஜயதசமி பண்டிகையாக கொண்டாடப்படுவது போல புத்த மதத்தினரால் அசோக விஜயதசமி என கொண்டாடப்படுகிறது.   மன்னர் அசோகர் இந்த தினத்தில் தான் போர் புரிவதை வெறுத்து  அகிம்சையை மனதில் கொண்டு புத்த மதத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது.   இதையொட்டி புத்த மதத்தினர் நேற்று குஜராத் மாநிலம் முழுவதும் பல நகரங்களில் புத்த மத மாற்றம் செய்வித்தனர்.

நேற்று மொத்தம் 300க்கும் மேற்பட்ட தலித்துகள் புத்த மதத்துக்கு மாறி உள்ளனர்.   அதில் பரோடாவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட தலித்துகள் மதம் மாறி உள்ளனர். போர்பந்தரை சேர்ந்த புத்த மத துறவியான பிரக்னா ரத்னா என்பவர் இவர்களுக்கு தீக்ஷை என்னும் மத மாற்ற சடங்கை நடத்தி உள்ளார்.  இதே போல குஷிநகர், அகமதாபாத் போன்ற நகரங்களிலும் விழாக்கள் நடைபெற்று பலர் புத்த மதம் மாறி உள்ளனர்.

இந்த நிகழ்வின் அமைப்பாளரான ரோகித் பகுஜன் சமாஜ் கட்சியின் மண்டல ஒருங்கிணப்பாளர் ஆவார்.  அவர், “சென்ற நூற்றாண்டில் இதே தினத்தில் பாபா சாகேப் அம்பத்கார் புத்த மதத்தை தழுவினார்.   1956ல் நடந்த அந்த நிகழ்வில் அவருர்டன் நாக்பூரில் லட்சக்கணக்கான மக்கள் புத்தமதத்துக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.   அம்பேத்கார் தீண்டாமையை எதிர்த்து போர் தொடுக்கவே புத்த மதத்தை தழுவினார்.   அத்துடன் மாமன்னர் அசோகரும் இதே தினத்தில் தான் புத்த மததுக்கு மாறினார்.   அம்பேதகாரைப் போலவே இந்த அசோக விஜயதசமியில் பல தலித்துகள் அவர்கள் விருப்பப்படி மதம் மாறி உள்ளனர்.   மற்றபடி இந்த நிகழ்வு கட்டாயத்தின் பேரில் நிகழவில்லை.” என தெரிவித்துள்ளார்.