Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

தேங்கும் மழை நீரை வெளியேற்ற 2000க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்! மேயர் பிரியா

Oct 27, 2025

சென்னை: ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில்  ஆய்வு மேற்கொண்ட மேயர்  பிரியா , சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற 2,000க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயாராக இருப்பதாக கூறினார்.

வடகிழக்குப் பருவமழையினை  முன்னிட்டு, இன்று அதிகாலை முதல் சென்னையில் விடாமல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று பிற்பகல் கனமழையாக மாறும் என வானிலை ஆய்வுமையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில்  ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,   மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற 2,000க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாகவும்,  முறிந்து விழும் மரங்களை அகற்ற 457 அறுவை இயந்திரங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், சாலைகளில் தேங்கும் மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவித்தவர்,  22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

 

Post navigation

தெருநாய்கள் விவகாரம்: பிரமான பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களுடன் தவெக தலைவர் ​விஜய் சந்திப்பு…

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer