சென்னை:

மிழகத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கப்படுவார்கள் என கல்வித்துறை அறிவித்து உள்ளது.

ஏற்கனவே 447 ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 600 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளிக்குத் திரும்பாத ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை  எச்சரிக்கை விடுத்திருந்தது.   இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று கைதானவர்கள் மற்றும் இன்று பள்ளிக்கு வராதவர்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டவர்கள் தற்போது வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இடை நீக்கம் செய்யப்பட்டவர்களின் பணியிடங்கள்  தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.