டில்லி

ந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு நில உரிமை வழங்குவதில் தென் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கூறி உள்ளது.

இந்திய மனிதவள மேம்பாட்டு துறையும் தேசிய குடும்ப நலத்துறையும் நடத்திய கணக்கெடுப்பின் முடிவுகள் வந்துள்ளது.    இந்த கணக்கெடுப்பில் பெண்களுக்கு குடும்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் உரிமைகள் பற்றி ஆய்வு நடத்தி முடிவுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் பல மாநிலங்களில் வீட்டுத் தலைமையை பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.    ஆனால் பல இடங்களில் பெண்களுக்கு நிலம் மற்றும் வீடுகளுக்கு உரிமையாளராக இருக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதும் கண்டறியப் பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பில் தென் இந்தியாவில் பெண்களுக்கு நில உரிமை வழங்குவதில் முன்னணியில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.    மொத்தமுள்ள இந்தியப் பெண்களில் 12.9% பெண்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளது.

இந்த கணக்கெடுப்பில் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம்  ஆகிய இரு மாநிலங்களும் பெண்களுக்கு நில உரிமை வழங்குவதில்  மிகவும் பின் தங்கி உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.