டில்லி

ரெயில்வேயில் நான்காம் நிலை ஊழியருக்கான தேர்வுக்கான ஐடிஐ படிப்பை 10ஆம் வகுப்பாக குறைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது ரெயில்வேத் துறையில் நான்காம் நிலை ஊழியர்களான,  டிராக்மேன், உதவியாளர்கள் போன்ற 62907 காலி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படும் என ரெயில்வே அறிவித்திருந்தது.     அப்போது அதற்கான குறைந்த பட்ச கல்வித்தகுதியாக ஐடிஐ என்னும் தொழில்நுட்ப பட்டயம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.    இதற்கு முன்பு இந்த பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பாக இருந்தது.

தற்போது மீண்டும் சென்ற வருடத்தைப் போல குறைந்த பட்ச தகுதி பத்தாம் வகுப்பாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.    இது குறித்து மத்திய ரெயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இது குறித்து பலரும் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.   ஏற்கனவே இருக்கும் கல்வித் தொகுதியை உயர்த்துவது தங்க்ளுக்கு செய்யும் அநீதி எனக் கூறி வருகின்றனர்.   இதனை மனதில் கொண்டு குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு, ஐடிஐ அல்லது அதற்கு சமமானது என முன்பு போல மாற்றப்பட்டுள்ளது.

மேலும் பொதுப் பிரிவில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுத் தொகையாக செலுத்தும் ரூ.500ல் அவர்கள் தேர்வு எழுதி முடிந்த பின் ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.   விசேஷ சலுகையின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் செலுத்தும் ரூ.250ம் முழுமையாக திருப்பு அளிக்கப்படும்.    மேலும்  விண்ணப்பதாரர்கள் முன்பு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் கையொப்பம் இடப்படும் என்பதை 15 மொழிகளில் கையொப்பம் இடலாம் என மாற்றப்பட்டுள்ளது.”  என அறிவித்துள்ளார்.