சென்னை

ன்று தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கலில் சுயேச்சைகள் அதிக அளவில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

 

வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள 21 மநாகராட்சிகள், 138 நகராட்சிகள், மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல் தொடங்கி உள்ளது.   இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய முதல் நாள் வாக்குப்பதிவு 5 மணிக்கு முடிந்தது.

இன்று சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.  நாளை சனிக்கிழமை அன்றும் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   பெரும்பாலான கட்சிகள் இதுவரை கூட்டணி இறுதியாகாததால் இன்று கட்சியினர் யாரும் வேட்புமனு தாக்குதல் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது

தற்போது அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதால் கூட்டணி குறித்த முடிவு வெளியான பிறகே கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.  இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி நிறைவடைகிறது.