டெல்லி: 2020ம் ஆண்டில் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தரவுகள் தெரிவிக்கின்றன.  020-ல் விவசாயிகளை  தற்கொலை 18% ஆக அதிகரித்துள்ள நிலையில், அதைவிட அதிகமாக வியாபாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள அவலம் நிகழ்ந்துள்ளது.  இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் பலியானவர்கள், தற்கொலை மற்றும் குற்றங்கள் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது வெளியாகி உள்ள 2020ம் ஆண்டுக்கான தரவு களில்,  கடந்த ஆண்டு (2020)  நாடு முழுவதும் விபத்தில் 3,74,397 லட்சம்  உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்றால் உலக பொருளாதாரமே ஸ்தம்பித்த நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. இதனால்  வேலையின்மை காரணமாக பலர் தற்கொலை முடிவுகளை நாடிய நிலையில், ஏராளமான தொழில் நிறுவனங்களும் நசுங்கின. அதுபோல ஏராளதான வியாபாரி களும், விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர் தேசிய குற்ற ஆவனத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது நாடு கொரோனா நெருக்கடியில் இருந்து மீண்டும் வரும் நிலையில்,  2020 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 11,716 இந்திய தொழிலதிபர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், இது  விவசாயிகளின் தற்கொலையை விட அதிகம் என்று தெரிவித்து உள்ளது.

கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது, விவசாயிகளை விட வணிகர்கள் அதிகம்பேர் கடந்த ஆண்டு தற்கொலை செய்துள்ளனர். 

கடந்த 2016ம் ஆண்டு விவசாயிகள் 11,379 பேர் தற்கொலை செய்திருந்த நிலையில், வணிகர்கள் 8,573 பேராக இருந்தது. அதுவே 2017ம் ஆண்டு 7,778 ஆக உயர்ந்த நிலையில், 2018ம் ஆண்டு 7990 ஆக அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டு விவசாயிகள் 10,281 பேர் தற்கொலை செய்துள்ள நிலையில், வணிகர்கள் 9,052 ஆக இருந்தாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் சூழல் காரணமாக வணிகர்கள் உயிரிழப்பு விவசாயிகளை விட அதிகரித்துள்ளது. 2020ம் ஆண்டு 10,677 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள நிலையில், 11,716 தொழிலதிபர்கள் தற்கொலை முடிவை நாடியுள்ளனர். விவசாயிகளின் தற்கொலையும் 18% அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

பொதுவாக இயற்கை சீற்றம், கடன்தொல்லை போன்ற காரணங்களால் தற்கொலை முடிவை நாடும் விவசாயிகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள தேசிய குற்ற ஆவணத்தில் ஆய்வறிக்கை,  கொரோனா பொதுமுடக்கத்தின்போது,  விவசாய நடவடிக்கைகள் தொடர்ந்ததன் பின்னணியில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்  PM கிசான் போன்ற வருமான ஆதரவு திட்டங்களால் பயன்பெற்றுள்ளதாகவும்  என்சிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.