பாட்னா
முதல்வர் அறிவித்துள்ள முதியோர் உதவித் தொகை உயர்வனது 7 மாதம் முன்பே நா/ங்கள் அறிவித்தது தான் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணிக்கும், ராஷ்டிர்ய ஜனதா தளம், , காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. தேர்தலையொட்டி ஆளும் பாஜக கூட்டணி மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது
ராஷ்ட்ரிய ஜனதா தளைத் தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம்
“பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தற்போது சுயநினைவின்றி உள்ளார். செயல்படாத முதல்வராக இருக்கிறார். அவரால் அவரது கட்சி வேட்பாளர்களைக் கூட தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளார். அவருக்கு பதிலாக ஐக்கிய ஜனதா தள கட்சி வேட்பாளர்களைக் கூட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் தேர்வு செய்யப் போகிறார்.
பிஹாரில் மெகா கூட்டணி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பென்ஷன் தொகை உயர்வு உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்தது. அந்தத் திட்டங்களை அப்படியே காப்பியடித்து தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு செயல்பட்டு வருகிறது. நாங்கள் 7 மாதங்களுக்கு முன்பே கொடுத்த அறிவிப்புகளையெல்லாம், தாங்கள் கொண்டு வந்து செயல்படுத்துவது போல அவர்கள் செயல்படுகின்றனர்.
எனக் கூறியுள்ளார்.