கேரளாவில் மே 29ம் தேதி பருவ மழை தொடங்கும்…வானிலை ஆராய்ச்சி மையம்

டில்லி:

இந்த ஆண்டின் பருவ மழை வரும் 29ம் தேதி கேரளா கடற்கரையில் தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1ம் தேதி தான் பருவ மழை கேரளா கடற்கரையை நெருங்கும். பின்னர் ஜூலை மத்தியில் நாட்டின் இதர பகுதிகளில் பருவ மழை பொழிவு தொடங்கும்.

முதல் 15 நாட்களில் நாட்டின் 50 சதவீத பகுதிகளில் பருவ மழை பொழிவு தொடங்கிவிடும். ஜூன் 3வது வாரத்தில் மத்திய இந்தியாவின் சோயாபீன்ஸ் பகுதிகளை அடைந்துவிடும். ஜூலை முதல் வாரத்தில் மேற்கில் பருத்தி விளைச்சல் பகுதியில் மழைப் பொழிவு தொடங்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் பருவ மழை பெய்ய தொடங்குவது நெல், சோயாபீன்ஸ், பருத்தி உற்பத்திக்கு பெரும் உதவியாக இருக்கும். நாட்டின் பெரும்பகுதி பொருளாதாரம், பணவீக்கம், குடிநீர் ஆதாரம் மற்றும் நீர்நிலைகள் இந்த பருவ மழையை தான் பெருமளவில் நம்பியிருக்கின்றன.

அதோடு எதிர்வரும் 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு மோடி அரசு இந்த பருவ மழையை தான் நம்பிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Monsoon Rains To Arrive On Kerala Coast On May 29, கேரளாவில் மே 29ம் தேதி பருவ மழை தொடங்கும்...வானிலை ஆராய்ச்சி மையம்