டில்லி

ற்போது 43% குறைந்துள்ள பருவமழை இந்த வாரம் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் வழக்கத்தை விட கோடை வெப்பம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பல வட இந்திய நகரங்களில் உலகின் அதிக அளவு வெப்பம் பதிவாகி உள்ள்து. இந்த கோடையால் சென்னை நகரில் நீர்நிலைகள் வரண்டு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப பருவமழையும் இந்த முறை தாமதமாக தொடங்க உள்ளதால் மக்கள் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது உருவான வாயுப் புயல் நாட்டின் மேற்கு பகுதிகளில் நல்ல மழையை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாயுப் புயல் இரண்டு முறை திசை மாறியதால் வலுவிழந்து மழை பெய்யவில்லை. தற்போதுள்ள நிலையில் நேற்று முன் தினம் கர்நாடக மாநிலத்தின் மங்களூரு பகுதியில் பருவமழை தொடங்கி உள்ளது.

ஆனால் அந்த மழை இப்போது குஜராத், மத்திய பிரதேசம், சத்திஸ்கர், பீகார். ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு வந்திருக்க வேண்டும்.  இந்த வருடம் தென்மேற்கு பருவமழை 7 நாட்கள் தாமதமாக பெய்ய உள்ளது. இதனால் இதுவரை 43% வரை பருவமழை குறைந்துள்ளது. இந்த வாரம் அது தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இதனால் மத்திய அரபுக் கடற்கரை பகுதிகள், கர்நாடகா, கோவா,மற்றும் தெற்கு கொங்கணம், ஆந்திரா, தமிழகத்தின் சில பகுதிகள், வங்கக்கடற்கரையின் மேற்கு பகுதிகள், மேற்கு வங்கம் மற்றும் ஒரிசாவில் சில பகுதிகள், உள்ளிட்டபல இடங்களில் இன்னும் 4-5 தினங்களில் நல்ல மழை பெய்யும்” என தெரிவித்துள்ளது.