புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்ட டலபட்ஸா என்ற கிராமத்தில் தாயின் அருகில் தூங்கிய பிறந்து 16 நாட்களே ஆன ஆண் குழதையை ஒரு குரங்கு தூக்கிச் சென்றது. இதை கண்டு தாய், அருகில் இருந்தவர்களும் அச்சமடைந்து கூச்சலிட்டனர்.

ஆனால் குரங்கு குழந்தையுடன் ஓடிவிட்டது. இது குறித்து வனத்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. குழந்தையை உயிருடன் மீட்க வனச்சரக அதிகாரி தலைமையில் 30 பேர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

குழந்தையால் சத்தமாக குரல் எழுப்பி அழ முடியாததால் குரங்கு அந்த குழந்தையை எங்கே வைத்துள்ளது? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறினர். இந்நிலையில் அருகில் உள்ள கிணற்றில் இன்று குழந்தையின் உடல் மிதந்ததை அப்பகுதி மக்கள் கண்டனர். கிணற்றுக்குள் குதித்து உடலை மீட்டனர். இச்சம்பவம் காரணமாக டலபட்ஸா கிராமம் சோகத்தில் மூழ்கியது.