டில்லி:

போலி வாக்குறுதிகள், பொய் பிரச்சாரம் ஆகியவற்றை தொகுத்து பாஜக மீது காங்கிரஸ் முட்டாள்கள் தின தாக்குதலை நடத்தியுள்ளது.

காங்கிரஸ் சார்பில் டுவிட்டரில் 70 வினாடிகள் ஓடக்கூடிய ‘முக்கிய செய்திகள்’ என்ற ஒரு வீடியோ வெளியிட்டது.

மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஊழலை ஒழித்துவிட்டது. நிரவ் மோடியும், மொகுல் சோக்சியும் அரசின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியை சுத்தம் செய்தனர்.

மோடி அரசு 200 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. தற்போது செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்துள்ள கிரகவாசிகள் கூட இந்தியாவில் வேலை செய்து வருகிறார்கள். ஸ்மார்ட் நகரங்களில் ரோபோட்கள் குப்பைகளை சேகரிக்கின்றன.

மாசு பாதிப்பில் இருந்து கங்கை நதி விடுபட்டுவிட்டது. அதன் தூய்மை நீரில் பிரதமர் மோடியின் படத்தை காணலாம். உங்கள் வங்கி கணக்கில் அரசு ரூ.15 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. முட்டாள்கள் தின வாழ்த்துகள், என்று அந்த வீடியோவில் கிண்டலடிக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக வலை தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.