திருவனந்தபுரம்:

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து கேரளாவில் நாளை (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

24 மணி நேரம் நடைபெறும் இந்த போராட்டத்தில் மத்திய, மாநில அரசு அலுவலக ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஓடாது. இதனால் அன்றாட பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.