சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறைக்குகடிதம் எழுதி உள்ளார். அதற்கு காரணமாக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜெ.தலைமையிலான அதிமுக அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது பலருக்கு அரசு  வேலை வாங்கி தருவதாக ஏராளமானோரிடம் பணம் பற்றார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தியது. தற்போது, அவர் அமைச்சரானதும், அவர்மீது புகார் அளித்தவர்கள் புகாரை வாபஸ் பெற்றனார். இதனால், அவர்மீதான வழக்கு ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.

இருந்தாலும் அவர்மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை 2 வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், இன்று (9ந்தேதி) விசாரணைக்கு நேரில் ஆஜராக, அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது

ஆனால், அமைச்சர் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து தப்பிக்கும் வகையில், சடடமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதை காரணம் காட்டி,ஒரு மாதம் அவகாசம் கோரி டிதம் அனுப்பியுள்ளார்.